Thursday, December 9, 2010

மாவிலையால் பல் தேய்க்க வேண்டுமா?


நவீன பேஸ்ட் மற்றும் பிரஷ் பௌஅன்படுத்தி இன்றைய தலைமுறை பல்துலக்கும் போது இதை பழமைவாதிகள் விரும்புவதில்லை. அவர்கள் மாவிலையால் பல்துலக்கி பழகிவிட்டனர். மாவிலையால் பல்தேய்த்தால் பற்கள் மல்லிப்பூ போல் வெண்மையாகும் என்று மட்டும் அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் இன்றைப்போல பேஸ்ட் குளிக்குமிடத்துக்குச் செல்வதில்லை. குளத்திக்கோ நதிக்கோ செல்லும் வழியில் ஏதாவது ஒரு மாமரத்திலிருந்து இலை பறித்தெடுத்து அதை இரண்டாக மடித்து தேய்த்துச் செல்வது வழக்கம். உணவருந்திய பின் வாய் கழுவினாலும் உணவின் அம்சங்கள் பற்களுக்கிடையே இருக்கும் இதிலிருந்து நோயணுக்கள் உருவாகி பற்சிதைவு முதலிய நோய்கள் வரலாம். பற்கள் சுத்தமானாலும் மாவிலை அணுக்கள் அழிக்க வல்லது என்று கண்டறிந்ததனாலே அதைப் பல் துலக்க பயன்படுத்துகின்றனர்.

No comments:

Post a Comment