Thursday, December 9, 2010

தவளை கத்தினால் மழைபெய்யுமா?


தவளை கத்தினால் மழை எனறொரு மூதுரை நாம் கேட்டதுண்டு. ஆனால் அதுபோன்ற எதுவும் விஞ்ஞானம் அங்கீகரிக்க வில்லை. மழைபெய்ததற்கு பின்னரே தவளை கத்துவது. அதாவது மழைக்காலம் ஆரம்பித்த பின்னரே அவை "பேக்ரோ" என்று கூவ ஆரம்பிக்கின்றன. பெரும்பான்மையான தவளை இனங்களும் முட்டையிடுவது தண்ணீரிலாகும். அதனால் இவற்றின் இனப் பெருக்கத்துக்கும் மழைக்கும் சம்பந்தமுண்டு. மழைக்காலம் ஆரம்பிக்கும்போது ஆண்தவளைகள் இணையை வசீகரிக்க இவ்வாறு கத்துகின்றன. உண்மையில் இவை கத்துவதல்ல. சுவாசகோசத்திலிருந்து சக்தியாக வெளியேயும் உள்ளேயும் செல்லும் வாயு குரல் நாண்களில் தட்டும் போது கத்துவது போன்ற இவ்வோசை வெளிப்படிகின்றது. தவளையின் வாய்க் கடியில் இருக்கும் வாயுப்பைகள் பலூன் போல் விரிவடைந்து ஒரு ஒலிபெருக்கியாகச் செயல்படுகின்றது. ஓசையும் மிக உரக்க வெளியேறுகின்றது. பலவகைத் தவளைகளும் எழுப்பும் ஓசையில் வேறுபாடு இருந்தாலும் எல்லாவற்றிற்கும் தன் சொந்தம் இணைகளைக் கண்டறியும் திறன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment