Thursday, December 9, 2010

வீடுதோறும் மூலிகைச் செடி அவசியம் தேவையா?


ஒரு வீடென்றால் முற்றத்தில் மூலிகைச் செடிகள் நட்டு வளர்க்க வேண்டும் என்று முன் தலை முறைகளில் கண்டிப்பாகக் கடைபிடித்து வந்தனர். எந்த நோயுற்ற நிலைக்கும் முதலுதவிக்கு உதவுவது இதுபோன்ற மூலிகைகளே. ஆனால் குப்பிகளில் அடைத்து வரும் மருந்துகள் பெருகத் தொடங்கியதும் மூலிகைகளை மனிதன் மறந்து விட்ட நிலை உருவானது. நமது நாட்டில் பூஜைகளுக்காக உபயோகிக்கும் பூக்கள் மற்றும் இலைகள் எல்லாமே மருத்துவ குணங்கள் உடையவை. இவை எல்லாமே ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுபவை. மேலும் நாட்டு வைத்தியத்தில் இவைகளை ஒற்றை மூலிகைகளாகப் பயன்படுத்துகின்றனர். வீட்டுமுற்றத்தில் மிகப் பிரியத்துக்குரிய நந்தியார் வட்டம் பூக்களை யார்தான் விரும்பாலிருக்க இயலும். இது விஷ்ணு சங்கரநாராணயன் சாஸ்தா என்ற தேவர்களுக்கு மிக விருப்பமான மருத்துவ குணமுடைய தாமரைப் பூ விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் பிரியமானவை. இது சூரியனின் நாயகியல்லவா!தேவி பூஜைக்காகப் பயன்படுத்துவது செம்பருத்தி,சிவபூஜைக்கு குவளையும் துளசியும் இவை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.சரும நோய்களுக்கு நவீன மருத்துவமே பரிந்துரை செய்வது வேப்பிலை, வேம்பு மாரியம்மனின் வாசஸ்தானம் என்பது நம்பிக்கை. கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு உத்தமமருந்தாகவே நந்தியார் வட்டம் வீட்டு முற்றத்தில் நட்டிருப்பது. கருப்பைக்கு உறுதியளிப்பது செம்பருத்தி. இதன் இலைகளை இட்த்து பிழிந்து சத்தெடுத்து பெண்கள் இப்போதும் அருந்துகின்றனர். உட்புற சுரப்பிகளை சரிவர செயல்படச் செய்ய பிச்சிப்பூ சேர்ப்பதுண்டு என்று ஆயுர் வேதம் கூறுகின்றது. தெற்றிப்பூ குழந்தைகளிலுண்டாகும் கரப்பனுக்கு விசேஷ மருந்து. ஜீரணம் கோளாறுகளுக்கு துளசியிலையும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குவளையும் மிகச் சிறந்தவை. எப்படியானாலும் ஒரு வீடானால் மூலிகைச் செடிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசாரியர் விதித்தது வீண்வார்த்தைகளோ மூட நம்பிக்கையோ அல்ல.

No comments:

Post a Comment