Thursday, December 9, 2010

கோயில் கொடிமரத்தை விட உயரமான கட்டடம் கட்டினால் தீ பிடிக்குமா?


கோயிலில் நாட்டியிருக்கும் கொடிமரத்தை விட உயரத்தில் கட்டடம் எழுப்பினால் தீ பிடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. கோயில் தமக்கு மிகவும் அவசியம் என்றாலும் இது போன்ற நம்பிக்கை சுத்த அனாவசியம் என்று இளைய தலைமுறை இதை அலட்சியப் படுத்துவது இன்றைய நிலை. மிகச்சரிதான்! கோயிலும் பூஜையும் பயனுள்ளவை என்றாலும் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடம் கட்டுவதனால் என்ன குடி முழுகிவிடப் போகின்றது? எந்த அடிப்படையில் கட்டடம் தீபிடிக்கும் என்று கூறுகின்றனர் என்று கேட்டால் பதிலளிக்க வேண்டியதுதான். கோயில் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடங்களில் தீபிடிக்க வாய்ப்பு மிக அதிகம் என்று விஞ்ஞானிகள் அங்கீகரித்த உண்மை. கோயில் முற்றத்தில் கொடிமரம் அதாவது துவஜம். அமைக்கும் போது தந்திர விதியும் வாஸ்து சாஸ்திரமும் அனுசரித்து செயல் படுகின்றோம். கொடிமரத்தின் கீழ மட்டத்தில் காணப்படும் நிதிக்கும்பம், பத்மம், கர்மம் என்ற பாகங்கள் பொதுவாக செம்பினால் ஆனவை அதற்கு மேல் பீடம் காணப்படும். கோயிலை மனித உடலாகக் கற்பனை செய்தால் கொடிமரம் அதன் முதுகெலும்பு என்று கருதுகின்றனர். கொடி மரத்தின் கீழ்பாகம் செம்பில் செய்வது மட்டுமல்ல கீழ மட்டம் மௌதல் மேல் நுனிவரை செம்பினால் பொதிந்தும் இருக்கும். இதெல்லாம் தந்திர விதிப்படி செய்யப்படுவது. கோயில் கொடிமரத்தை விட உயர்ந்த கட்டடத்தில் தீபிடிகும் என்பதை நவீன விஞ்ஞானமும் ஆமோதிக்கின்றது. கோயில்முற்றத்தில் அமைக்கப்படும் கொடிமரம் அந்த ஊரில் மிகம் உயரமாக இடிதாங்கியாகச் செயல் படுகின்றது. எத்தனை சக்தியாக மின்னல் உண்டானாலும் கொடிமரம் அதை "எர்த்" செய்து ஊரிலுள்ள கட்டடங்களை அழிவிலிருந்து காப்பாற்றும். ஆனால் அதைவிட உயரமான கட்டடங்கள் கட்டியிருந்தால் மின்னல் முதலாவது பாதிப்பது அந்தக் கட்டடத்தையே என்பது நிஜம். கொடிமரத்தை விட உயரமாக கட்டடம் எழுப்பினால் அது தீபிடிக்கும் என்பதன் முனோர்கள் கூறியிருந்ததன் சரியான காரணம் இதுவே.

No comments:

Post a Comment