Thursday, December 9, 2010

அமாவாசி விரதம் ஆசிர்வாதம் பெற்றுத்தருமா?


விரதங்களை ஆசரிப்பது நம் முன்னோர்கள் தம் வாழ்க்கையின் பாகமாகவே கருதியிருந்தனர். இறைவன் அருளுக்குப் புறமே, இது போன்ற விரதங்கள் நித்திய வாழ்வில் செலுத்தும் செல்வாக்கை அறிந்திருந்தனர் பண்டைய மக்கள். செல்வம்,உடல்நலம் சந்ததிச்செல்வம் முதலியவை பலனாகக் கிடைக்குமாறு கடைப் பிடித்திருந்த அமவாசி விரதத்தைக் குறித்து நம் பண்டைக் காலத்து மக்களுக்கு சில உண்மைகளும் தெரிந்திருந்தன. காலை புண்ணிய தீர்த்தத்தில் குளித்த பின் பலி அர்பணம் செய்தல்,ஒரு வேளை விரதம் முதலியவை அனுசரித்திருந்தனர். ஆடி, தை. மாசி, ஐப்பசி மாதங்கள் வரும் அமாவாசி மிக முக்கியமானதாக நினைத்திருந்தனர். அமாவாசிக்கு முன் தினமும் அமாவாசி அன்றும் ஒரு வேளையே உணவருந்துவதுண்டு. அமாவாசியன்று சந்திரனில் ஒளியில்லாத பாகம் பூமிக்கு நேருக்கு நேராக வருகின்றது. இது மனித உடலில் சில பாதிப்புக்கள் உண்டாக்குகின்ரது. இதில் விளையக் கூடிய தீங்குகளைத் தவிர்க்கவே அமாவாசி விரதம் விதித்திருக்கலாம். சந்திரனுக்கு பூமியில் பாதிப்புண்டாக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் கடல் வேலியேற்றமும் வேலியிறக்கமும்.

No comments:

Post a Comment