Thursday, December 9, 2010

வீட்டின் தரிசனம் ஏன் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும்?


புதிய சூழ்நிலைகளில் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்றாலும் வீடுகட்டும் போது அதன் தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் போதிக்கின்றது. வீடு எந்த திசையை நோக்கியிருந்தால் என்ன வீடு ஐசுவரியத்துடன் இருந்தால் போதாதா என்று பலரும் கேட்கலாம். ஆனால் தரிசனம் வாஸ்திப் பிரகாரம் இருந்தால் ஐசுவரியம் கூடும் என்பது இப்போதைய கண்டுபிடிப்பு. தரிசனம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி கட்டடப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நவீன சாஸ்திரப் படியான பின் துணை உறுதியாக்கப் பட்டுள்ளது. நம்நாட்டில் கிடைக்கும் மழை, காற்று,சூரிய ஒளி என்பவற்றைக் கணக்கிலெடுத்து வாஸ்து சாஸ்திரம் இந்த விதி ஏற்படுத்தியுள்ளது. மேலும், வடக்கு திசை நோக்கி தரிசனம் வைத்து வீடுகட்டினால் கூடுதல் ஐசுவரியம் உண்டாகும் என்றும் செய்துள்ளது.'ஓசோன்' பாளத்தில் பிளவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற கண்டுபிடிப்பு இதனுடன் சம்பந்தப்பட்டது எனக் கூறலாம். இவ்வாறு நிகழும் போது சூரியனிலிருந்து வரும் 'அல்ட்ரா வையலட்' கதிர்கள் நேரடியாக பூமியில் பதியும். இது போன்று தீமை விளைவிக்கும் அல்ட்ரா வையலட் கதிர்கள் நேரடியாக வீட்டின் அங்கணத்தில் பதியும் போதுண்டாகும் தீமைகளைத் தவிர்க்க வடக்கு தரிசனம் கூடுதல் ஏதுவாடிருக்கும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் வடக்கு அரை கோளத்தில் நம்நாடு இருப்பதால் சூரியன் கூடுதல் காலம் தெற்கு மாறிக் காணப்படும். அதனால் தெற்கு தரிசனமுள்ள வீடுகளில் வெப்பம் அதிகமாயிருக்கும்.

No comments:

Post a Comment